ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

You are currently viewing ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ன, இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா உள்ளிட்ட 28 பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு எதிரான போர்க் குற்றச் செயல் சாட்சியங்களை திரட்டும் நோக்கில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பேசெலட்டினால் இந்த பிரதிநிதிகள் குழு அனுப்பி வைக்கப்படவிருந்தது. விசாரணையாளர், மொழிபெயர்ப்பாளர், வழக்குப் பணிப்பாளர் உள்ளிட்ட ஐந்து பிரதிநிதிகள் இவ்வாறு இலங்கை விஜயம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

இந்தப் பிரதிநிதிகள் காணாமல் போனவர்களின் குடும்பங்களை சந்திக்கவும், வடக்கு தமிழ் அரசியல்வாதிகளை சந்திக்கவும் திட்டமிட்டிருந்தனர். எனினும், குறித்த பிரதிநிதிகளின் இலங்கை விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments