ஐரோப்பிய நாடுகளை பழிவாங்க ரஷ்யா!

You are currently viewing ஐரோப்பிய நாடுகளை பழிவாங்க ரஷ்யா!

மேற்கத்திய நாடுகளை பழிவாங்கும் விதமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒவ்வொரு நாளும் 8.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பயன்படுத்தப்படாத எரிவாயுவை எரிக்கிறார் என்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளிகாட்டுகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய பிறகு, உலகளவில் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்தன, மேலும் ஐரோப்பாவுக்கான நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைனை பழிவாங்கும் விதமாக ரஷ்யா மூடிய பிறகு, ஐரோப்பா முழுவதும் உள்ள குடும்பங்கள் சாத்தியமான மின்தடை மற்றும் எரிசக்தி விநியோகத்தை எதிர்கொள்கின்றன.

அதே நேரத்தில் இன்று பிரித்தானியாவில் எரிவாயு விலை வரம்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பாவுக்கான நோர்ட் ஸ்ட்ரீம் 1 பைப்லைனை ரஷ்யா மூடிய பிறகு, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு வடக்கே போர்டோவாயாவில்(Portovaya) உள்ள காஸ்ப்ரோமின் அமுக்கி ஆலையில் (Gazprom’s compressor plant) மிகப்பெரிய அளவில் எரிவாயு எரிக்கப்படுவதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

பின்லாந்தின் எல்லைக்கு அப்பால் உள்ள உள்ளூர்வாசிகள் முன்பே ஜூன்மாத இறுதியில் ஆலையில் ராட்சத ஆரஞ்சு தீப்பிழம்புகள் எழுவதை கண்டுள்ளனர்.

இதுத் தொடர்பாக ரைஸ்டாட் எனர்ஜியின் ஆய்வாளர்கள் தெரிவித்த கூற்றில், ஒவ்வொரு நாளும் சுமார் 4.34 மில்லியன் கன மீட்டர் எரிவாயு எரிக்கப்படுகிறது, அதன் மதிப்பு $10 மில்லியன் எனத் மதிப்பிட்டு இருந்தனர்.

அத்துடன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சிண்ட்ரே நட்ஸன் தெரிவித்த கருத்தில், எரிவதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும், எரிபொருளின் அளவுகள், உமிழ்வுகள் மற்றும் இருப்பிடம் ஆகியவை ஐரோப்பாவின் ஆற்றல் சந்தைகளில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை நினைவூட்டுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பயன்படுத்தப்படாத எரிவாயு பொதுவாக ஜெர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கும் ஆனால் அதற்கு பதிலாக எரிக்கப்படுகிறது என பிபிசி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments