ஒக்ரோபரில் ஒன்ராறியோவில் 9 ஆயிரத்தை தொடும் தொற்றாளர் எண்ணிக்கை!

You are currently viewing ஒக்ரோபரில் ஒன்ராறியோவில் 9 ஆயிரத்தை தொடும் தொற்றாளர் எண்ணிக்கை!

ஒன்ராறியோவில் கொரோனா நான்காவது அலைக்கான வாய்ப்புகள் அதிகம்என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதாகவும், இதனால், நாளொன்றிற்கு 9,000 பேர்கள் வரையில் பாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்ராறியோ மாகாணம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க தவறினால், பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்றே மாகாணத்தின் அறிவியல் ஆலோசகர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவதாலும், குறிப்பிட்ட சில ஊழியர்கள் அலுவலகங்களுக்கு திரும்புவதாலும் அக்டோபர் 1ம் திகதிக்கு முன்னர் நாளொன்றிற்கு பாதிப்பு எண்ணிக்கை 9,000 தொடலாம் எனவும், இந்த எண்ணிக்கையை கடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு நம்பிக்கையான சூழ்நிலையில், தொடர்புகளில் 30 சதவிகிதம் குறைக்கப்பட்டதன் அடிப்படையில், பாதிப்பு எண்ணிக்கை சில நாட்களுக்குள் குறைய ஆரம்பித்து அக்டோபர் மாதத்திற்குள் 500 க்கு கீழ் குறையும் என கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் எந்த மாறுதலும் இல்லாமல் போனால், அக்டோபரில் இந்த பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை 4,000 என உயரும் எனவும், இது மூன்றாவது அலையின் போது உச்சம் பெற்றது போன்ற நிலைக்கு செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும், நான்காவது அலையானது அனைத்து வயதினரையும் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும், அதி தீவிர சிகிச்சையில் பலர் செல்லலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

டெல்டா பரவலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் எண்ணிக்கை அதிகரிப்புமே ஒன்ராறியோவில் நான்காவது அலையின் தாக்கம் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments