ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் திணறி வரும் இந்தியா!

You are currently viewing ஒக்ஸிஜன் பற்றாக்குறையால்  திணறி வரும் இந்தியா!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை தீவிரமாகி வரும் நிலையில் அங்கு மருத்துவமனைகள் தொற்று நோயாளர்களால் நிரம்பியுள்ளன. அத்துடன், ஒக்ஸிஜன் பற்றாக்குறையால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் இருந்தவாறு பலா் ஒக்ஸிஜன் உதவிகோரி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு அவசர கூட்டத்தைக் கூட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் முழுமையாக ஈடுபடுமாறு தனது நிர்வாகத்தைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் மருத்துவமனை படுக்கைகளை அதிகரிப்பதுடன், ஒக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர்களை அவசரமாக தேவையான இடங்களுக்கு விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறும் அவா் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

தொற்று நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி அவா்களின் தேவைகளை நிறைவு செய்யுமாறும் பிரதமர் மோடி பணிப்புரை விடுத்தார்.

தொற்று நோயாளர் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக்குமாறும் அவா் கேட்டுக்கொண்டார்.

ஆனால் தனது தலைமையிலான பாரதீஜ ஜனதாக் கட்சியின் தோ்தல் வெற்றியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெருந்தொகை கூட்டத்தை பொறுப்பின்றி மோடி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டமையே தொற்று நோய் அதிகரிப்புக்குக் காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மோடி, இதுபோன்ற ஒரு பெரும் தொகை சனத்திரளை நான் இதற்கு முன்பு காணவில்லை என பெருமை பேசினார்.

இந்நிலையில் தலைநகர் புதுதில்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி பிரதமர் மோடியின் இந்த அரசியல் பேரணிகளை கேலி செய்து பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் மயானங்களின் முன்பு வரிசையில் காத்திருப்போர் தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய பதிவுகளை ஆம் ஆத்மி தனது சமூக வலைத்தளங்களில் பிரசுரித்து கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவிட்19 தொற்று நோயின் உச்சத்தின் மத்தியில் மிகப் பெரும் மக்கள் கூட்டத்தைக் கூட்டி அது குறித்து மகிழ்ச்சி வெளியிடுவதென்பது முற்றிலும் உணர்ச்சியற்ற ஒரு நபரால் மட்டுமே முடியும் என மோடி குறித்து பா.ஜா.கவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை இல்லாதளவு மிக அதிகளவான நேற்று 2 இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு 1,501 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றுடன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இந்தியாவில் தினசரி தொற்று நோயாளர் தொகை 2 இலட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.

நேற்று பதிவான புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 47 இலட்சத்து 88 ஆயிரத்து 109 -ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், மொத்தமாக கொரோனா பலியெடுத்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 77 ஆயிரத்து 150- ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments