ஒரு மாதத்துக்கு மூடப்படும் பிரித்தானியா! “கொரோனா” பரவலின் எதிரொலி!!

You are currently viewing ஒரு மாதத்துக்கு மூடப்படும் பிரித்தானியா! “கொரோனா” பரவலின் எதிரொலி!!

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் “கொரோனா” பரவலை கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் 05.11.2020 இலிருந்து ஒரு மாதத்துக்கு நாட்டை முடக்க நிலையில் வைத்திருப்பதற்கு முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் “Boris Johnson” இன்று அறிவித்துள்ளார்.

மதுபானச்சாலைகள், உணவுச்சலைகள் உள்ளிட்ட, மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மூடப்படவிருப்பதாகவும், எனினும் உணவுச்சாலைகளிலிருந்து உணவுகளை வாங்கிச்செல்ல வசதி செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுவதோடு, அத்தியாவசிய மாளிகைப்பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்படாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள், உயர்கல்விநிலையங்கள் போன்றவை வழமைபோலவே இயங்குமெனவும், எனினும், மக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்துமுகமாக பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா முழுவதிலும் சுமார் 1 மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், முன்னைய அலையை விட இரண்டாவது தொற்று அலையில் அதிகமானவர்கள் உயிராபத்தை சந்திக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் “BBC” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள