ஒஸ்லோ வழித்தடங்களில் மாற்றம்!

You are currently viewing ஒஸ்லோ வழித்தடங்களில் மாற்றம்!

கொரோனா வைரஸ்சின் தொற்றுக்காரணமாக தொடர்ந்தும் ஏற்பட்டிருக்கும் அசாதரண சூழ்நிலை காரணமாக , மார்ச் 23 முதல் வழித்தடங்கள் குறைக்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  சுமார் 15% குறைவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஒரு புதிய நெருக்கடியான வாழ்க்கையை ஏற்படுத்தி இருக்கின்ற நிலைப்பாட்டின், காரணமாக பலர் வீட்டிலேயே இருக்கிறார்கள்.  அதே சமயம், சமூகத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் ஒரு நல்ல சேவையை உருவாக்குவது முக்கியம்,அதன் அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்களை கவனிக்கவும்!

இலக்கம் 2/3 தடங்களின் நிலக்கீழ்தொடரூந்து சேவை விடுமுறை திட்டத்திற்கு செல்கிறது, தொடரூந்து இலக்கம் 1 தனது சேவையை Helsfyr வரை மட்டுப்படுத்துகிறது.

சிறிய தொடரூந்து(trykk)ஒவ்வொரு 10 நிமிடங்களிலிருந்து ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் தனது சேவையை மாற்றியுள்ளது.

பெரும்பாலான தடங்களில் பயணிக்கும் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படுகிறது, மேலும் அவசரசேவை பேருந்துகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Nesoddensambandet படகுச்சேவை அவசரமாக சில குறைவான புறப்பாடுகளுடன் இயக்கப்படுகிறது.  Vollen-Slemmestad படகுகளில் சில புறப்பாடு ரத்து செய்யப்படுகிறது.  படகுகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு படகிலும் பயணிகளுக்கு இடையேயான தூரத்தை உறுதிப்படுத்த குறைந்த இருக்கைகள் இருக்குமெனவும் குறிப்பிடப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள