கடலில் மூழ்கிய புலம்பெயர் மக்களின் படகு: சிறார்களை கடலில் வீசிய கொடூரர்கள்!

You are currently viewing கடலில் மூழ்கிய புலம்பெயர் மக்களின் படகு: சிறார்களை கடலில் வீசிய கொடூரர்கள்!

இத்தாலி அருகே கடலில் மூழ்கிய புலம்பெயர் மக்களின் படகில் இருந்து உயிர் தப்பியவர்கள் வெளிப்படுத்தியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி அருகே புலம்பெயர் மக்களின் படகு ஒன்று கடுமையான கடல் சீற்றத்தில் சிக்கி உடைந்துள்ளது. இதில் 14 சிறார்கள் உட்பட 67 பேர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி துரித நடவடிக்கையால் 80 பேர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கியில் இருந்து புறப்பட்ட அந்த படகில் 170 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் பயணித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் 7,000 பவுண்டுகள் வரையில் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பெரும்பாலான பயணிகள், முழு குடும்பங்கள் உட்பட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மேலும், கடல் சீற்றம் காரணமாக படகு மூழ்கும் ஆபத்தை உணர்ந்த படகோட்டிகள், சிறார்களை அவர்கள் உறவினர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பறித்து கடலில் வீசியதாகவும் உயிர் தப்பியவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மட்டுமின்றி, படகு மூழ்கும் தருவாயில் குறைந்தது 20 பயணிகளை அவர்களில் கடலில் தள்ளியதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், இத்தாலியில் விளையாட்டு அரங்கம் ஒன்றில் திங்களன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக இறந்தவர்களின் சவப்பெட்டிகளை வைத்திருந்தனர்.

இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments