கண்டி வனப்பகுதியில் குரங்குகள் இறப்பு, கொரோனா சந்தேகம்!

You are currently viewing கண்டி வனப்பகுதியில் குரங்குகள் இறப்பு, கொரோனா சந்தேகம்!

கண்டி நகரத்தைச் சுற்றியுள்ள உடவத்தகேலே வனப்பகுதியில் அண்மையில் பல குரங்குகள் இறந்து கிடந்தன. இக் குரங்குகள் கொரோனாவால் இறந்ததா என்ற சந்தேகத்தில் இறந்த குரங்கு ஒன்றில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளின் படி இந்த மரணம் கோவிட் -19 தொடர்பானது அல்ல, விசம் அருந்தியதால் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வனப்பகுதியில் பல குரங்குகள் இறந்து கிடந்தன, இவ் இறப்புக்கள் கொரோனா காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் இறந்த குரங்கின் ஒரு சடலம் பி.சி.ஆர் சோதனைக்கு அனுப்பப்பட்டது.

பெரதெனிய பல்கலைக்கழக கால்நடை மருத்துவ பீட நோயியல் நிபுணர் கவிந்த விஜேசுந்தேரா சண்டே டைம்ஸிடம் குரங்கு விஷம் காரணமாக இறந்ததாகவும், கொரோனா தொற்றால் இறக்கவில்லை எனவும் தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள