கனடாவில் வேகமெடுக்கும் கொரோனா! – நேற்று மட்டும் 1714 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!

You are currently viewing கனடாவில் வேகமெடுக்கும் கொரோனா! – நேற்று மட்டும் 1714 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு!

கனடாவில் நேற்று ஒரே நாளில் 1714 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து அங்கு தொற்றுக்குள்ளானவரகளின் எண்ணிக்கை 31,809 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, தொற்றுக்குள்ளாகிய 1310 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவில் நேற்று புதிதாக 564 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து அங்கு தொற்றுக்குள்ளானவர்கள் தொகை, 9525 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 478 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

கியூபெக்கில் நேற்று 941 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16,798 ஆக அதிகரித்துள்ளது.இங்கு 688 மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று மாத்திரம் கியூபெக்கில் 58 பேர் உயிரிழந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்ந்துகொள்ள