கனடாவை சீண்டும் சீனா: எச்சரித்த ட்ரூடோ!

You are currently viewing கனடாவை சீண்டும் சீனா: எச்சரித்த ட்ரூடோ!

ஆசிய பிராந்தியத்தில் பறந்த கனேடிய இராணுவ விமானங்களுக்கு மிக ஆபத்தான தொலைவில் சீன ஜெட் விமானங்கள் பறந்து மீண்டும் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்துவதாக கனடா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியாவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் கனேடிய ராணுவ விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது மிக ஆபத்தான நெருங்கிய தொலைவில் சீன ஜெட் விமானங்கள் பறந்ததால் மோதலை தவிர்ப்பதற்காக கனேடிய விமானங்கள் தங்கள் பாதையை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக கனடா தெரிவித்துள்ளது.

சீனாவின் இந்த நடத்தை தொழில்சார்ந்த மற்றும் அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்றும் இதுத் தொடர்பாக சீனாவுடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிலைமையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், அதை சீன சகாக்களுடன் அழுத்தமாக எடுத்துரைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சீனாவின் இத்தகைய செயல்கள் தொழில் சார்ந்தவை அல்ல என்றும், இது கனேடிய விமான படைவீரர்களின் பாதுகாப்பு குறித்தது என்றும் கனடாவின் ஆயுதப்படை ஊடக உறவுகளின் தலைவர் Dan Le Bouthilier தெரிவித்துள்ளார்.

கனடாவின் இந்த குற்றச்சாட்டு குறித்து சீனா எத்தகைய விளக்கங்களும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments