கரீபியன் கடலில் ரிக்டர் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • Post author:
You are currently viewing கரீபியன் கடலில் ரிக்டர் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கரீபியன் கடலில் ஜமைக்கா மற்றும் கிழக்கு கியூபாவிற்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கரீபியின் தீவுகள் உள்பட மெக்சிகோவில் இருந்து ஃப்ளோரிடா வரையிலான அனைத்து பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொது மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து கியூபா, ஜமைக்கா மற்றும் கேமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடற்கரை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பின்னர் சுனாமி அபாயம் நீங்கியதாகவும், மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் சர்வதேச சுனாமி ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. மேலும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள