காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் – சர்வதேச விசாரணை தேவை!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் – சர்வதேச விசாரணை தேவை!

அமெரிக்காவுக்கு சென்று அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போதே இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேர் வரி திருத்த சட்ட மூலத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி இராணுவத்தினரின் பேச்சை நம்பி அவர்களிடம் சரணடைய சென்ற பல பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும். தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதே இவர்கள் காணாமலாக்கப்பட்டனர்.

இதேவேளை அண்மையில் அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு தனது பேரப்பிள்ளையை கொஞ்சி தூக்கி மகிழ்ந்ததை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். காணாமலாக்கப்பட்ட இந்த பிள்ளைகளின் தந்தைகள் தற்போதும் கண்ணீரோடு வாழ்ந்து வருவதோடு தனது பிள்ளைகளை தேடி வருகிறார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்த காணாமலாக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார். அத்துடன் காணாமலாக்கப்பட்ட பல சிறுவர்களின் பெயர் விபரங்களையும் கஜேந்திரன் எம்.பி. சபையில் வெளிப்படுத்தினார்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments