காணொளி வழக்குகள் ; காணொளிக் காட்சி மூலம் விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

  • Post author:
You are currently viewing காணொளி வழக்குகள் ; காணொளிக் காட்சி மூலம் விசாரிக்கும் சென்னை உயர்நீதிமன்றம்!

கொரோனா ஊரடங்கு முடியும் வரை காணொளி காட்சி மூலமே வழக்குகள் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு முடியும் வரை உயர்நீதிமன்றம் இயங்காது என்றும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்குகளுக்கு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள், போலீசார் மற்றும் உயர்நீதிமன்ற செய்தியாளர்கள் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், அரசு தரப்பில் ஆஜராகி வந்த வழக்கறிஞரின் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், வழக்குகளின் விசாரணையின்போது நீதிமன்றத்திற்குள் வந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஊரடங்கு முடியும் வரை உயர்நீதிமன்றம் இயங்காது என்றும், வழக்குகள் காணொளி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள