காற்றிலிருந்து எரிபொருள்! புதிய நம்பிக்கை!!

You are currently viewing காற்றிலிருந்து எரிபொருள்! புதிய நம்பிக்கை!!

காற்றிலிருந்து கரியமிலவாயுவை (Co2) பிரித்தெடுத்து, அதிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முறைமை, சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் “சான்பிரான்சிஸ்கோ” நகரில் பரீட்ச்சார்த்தமாக மேற்கொள்ளப்படும் இம்முயற்சி பெரும் செலவீனமானது எனினும், வளிமண்டலத்தில் நிறைந்து போய்க்கிடக்கும் கரியமிலவாயுவை குறைப்பதற்கும், சூழலை மாசடைய வைக்கும் கழிவுகளெதையும் வெளிவிடாத எரிபொருளை தயாரிப்பதற்கு பெரிதும் இணக்கமாக இருப்பதாக கருதப்படுகிறது.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கு, ஜெர்மனியின் பிரபல வாகனத்தயாரிப்பு நிறுவனமான “BMW” நிதியுதவி வழங்கிவரும் நிலையில், கனடா, சுவிட்சலாந்து, நோர்வே ஆகிய நாடுகளும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி வருகின்றன.

மேற்படி புதிய தொழிநுட்பத்தை பாவித்து தயாரிக்கப்படும் எரிபொருள், 2021 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, தற்போது பாவனையிலிருக்கும் “பெற்றோல்” எரிபொருளுக்கு மாற்றான எரிபொருளாக கொண்டுவரப்படுவதே பிரதான நோக்கமாகுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

வளிமண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் காரியமிலவாயுவும், நீராவியும், உயர் தொழிநுட்பத்தை பாவித்து பெற்றோலுக்கு சமனான எரிபொருளாக மாற்றப்படுமெனவும், சாதாரணமாக பெற்றோல் எரிபொருளில் இயங்கும் வாகனங்களில் இப்புதிய எரிபொருளை நேரடியாகவே பயன்படுத்த முடியுமெனவும், ஏற்கெனவே கரியமிலவாயு பிரித்தெடுக்கப்படுவதால், இவ்வெரிபொருளை பாவித்து இயங்கும் வாகனங்கள் கரியமிலவாயு கழிவெதையும் வெளியிடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள