காற்றில் நெடுந்தூரம் பயணிக்கும் “கொரோனா” வைரஸ்!

You are currently viewing காற்றில் நெடுந்தூரம் பயணிக்கும் “கொரோனா” வைரஸ்!

“கொரோனா” வைரஸ், முன்னர் அறியப்பட்டதிலும் பார்க்க காற்றில் நெடுந்தூரம் பயணிக்கக்கூடியதென நோர்வேயின் இராணுவத்துறை அறிவித்துள்ளது.

13 வேறுபட்ட ஆய்வுகள்மூலம் இதை நிறுவ முடிந்துள்ளதாக தெரிவிக்கும் இராணுவத்துறை, “கொரோனா” வால் பீடிக்கப்பட்டவர்களை சுற்றிலும் இருந்த காற்றில் உள்ள சிறுதுணிக்கைகளை ஆராய்ந்தபோது, “கொரோனா” வைரஸால் பீடிக்கப்பட்டவர்களிலிருந்து சுமார் 4 மீட்டர் தூரத்தில் “கொரோனா” வைரஸ் காற்றில் அவதானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது. நவீன இயந்திரங்கள் மூலம் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக மேலும் தெரிவிக்கும் நோர்வேயின் இராணுவத்துறை, எனினும், “கொரோனா” வைரசால் பீடிக்கப்பட்டிருந்தவர்களில் இருந்தும் 4 மீட்டர்களுக்கு அப்பால் நின்றிருந்தவர்கள், தொற்றுதலுக்கு உள்ளாவார்கள் என முடிவு செய்துவிட முடியாதெனவும் தெரிவிக்கிறது.

“கொரோனா” வால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முகக்கவசம் / மாஸ்க் பாவிக்கும்படியும், ஒவ்வொருவர்களுக்குமிடையில் குறைந்தது 2 மீட்டர்கள் இடைவெளியாவது இருக்கவேண்டுமென இதுவரை இருந்துவந்த கட்டுப்பாடுகள் சிறிதளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நோர்வே இராணுவத்துறையின் இவ்வாய்வு தரவுகள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments