கிறிஸ்மஸ் ஆராதனையை வீட்டில் இருந்தே மேற்கொள்ளவும்!

You are currently viewing கிறிஸ்மஸ் ஆராதனையை வீட்டில் இருந்தே மேற்கொள்ளவும்!

தற்பேததைய கொரோனாத் தொற்று பரவல் அபாய நிலையை கருத்தில் கொண்டு இந்தமுறை கிறிஸ்மஸ் ஆராதனையை வீட்டில் இருந்தே மேற்கொள்ளுமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தமுறை கிறிஸ்மஸ் ஆராதனைகளை, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி முன்னெடுக்குமாறு, அனைத்து கிறிஸ்த்தவ பாதிரியார்களுக்கும், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இந்தமுறை கொவிட் 19 பரவல் காரணமாக கத்தோலிக்க மக்கள் தத்தமது வீடுகளில் இருந்து மிகவும் அர்த்தபூர்வமாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும்.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தப்படாத இடங்களில் 50 பேருக்கு குறையாக எண்ணிக்கையைக் கொண்டவர்களுடன் நத்தார் ஆராதனையை நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மேல்மாகாணத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனையை, 24ம் திகதி 6 மணி முதல் ஒவ்வொரு மணித்தியாலத்தின் அடிப்படையில் சிறிய குழுக்களை கொண்டு நடத்துமாறும் அறுவுறுத்தப்பட்டுள்ளதாக கர்தினால் தெரிவித்தார்.

அத்துடன் பிரதான நத்தார் ஆராதனை கிறிஸ்மஸ் தினத்தின் நள்ளிரவு முதல் தொலைகாட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும், அதன் ஊடாக கத்தோலிக்க மக்கள் கிறிஸ்மஸ் ஆராதனையை வீட்டில் இருந்து மேற்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள