குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ; மோடியுடன் டிரம்ப் பேசுவார்!

  • Post author:
You are currently viewing குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ; மோடியுடன் டிரம்ப் பேசுவார்!

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து மொடியுடன் டிரம்ப் பேசுவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு டிரம்ப் வருகிற 24-ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப், புதுடெல்லி மற்றும் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு செல்கிறார்.  அவர் பிரதமர் மோடியுடன் இணைந்து பொது கூட்டம் ஒன்றில் நாட்டு மக்கள் முன் உரையாற்றவுள்ளார்.

25-ந்தேதி டொனால்டு டிரம்ப்- பிரதமர்  மோடி  இடையிலான பேச்சுவார்த்தையில் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை அதிகரித்தல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரித்தல் மற்றும் எச் 1 பி விசா பிரச்சினைகள் இடம்பெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது  குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) ஆகியவை குறித்து  அமெரிக்காவின் கவலைகளை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

டிரம்ப் இந்தியாவிற்கு வரும் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை குறைக்கவும்  மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை  ஊக்குவிப்பார்.

டிரம்ப் மோடியுடன் சிஏஏ மற்றும் என்ஆர்சி குறித்து பேசுவாரா  என்ற கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிகாரி, இந்த பிரச்சினைகள் குறித்து நிர்வாகம் அக்கறை கொண்டுள்ளது என்றும்,  டிரம்ப் இந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியுடன் பேசுவார் என்றும் கூறியுள்ளார். 

பகிர்ந்துகொள்ள