கொங்கோவில் ஆற்றில் படகுகள் மூழ்கியதில் 100-க்கு மேற்பட்டோர் பலி!

You are currently viewing கொங்கோவில் ஆற்றில் படகுகள் மூழ்கியதில் 100-க்கு மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட 9 படகுகள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100-க்கு மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தை அடுத்து ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை தேடும் பணியின்போது நேற்றுவரை 51 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 69 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களில் பலர் இறந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அதேநேரம் மூழ்கிய படகுகளில் இருந்த 39 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொங்கோ ஜனநாயக குடியரசின் அதிகாரிகள் நேற்று சனிக்கிழமை தெரிவித்தனர்.

ஆற்றில் மூழ்கியவை பாரம்பரிய மர படகுகள். இவை அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன என கொங்கோ வடமேற்கு மாகாணமான மங்கலா ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் நெஸ்டர் மக்படோமாக்படோ கூறினார்.

மோசமான காலநிலை மற்றும் அதிக நெரிசல் இந்த விபத்துக்குக் காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் அவா் கூறினார்.

ஆற்றில் மூழ்கிக் காணாமல் போனவர்களை தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. எனினும் காணாமல் போனவர்களை உயிருடன் மீட்க முடியும் என்ற நம்பிக்கை மறைந்து வருகிறது என மங்கலா ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை திங்கள்கிழமை முதல் மூன்று நாட்கள் மங்கலா மாகாணத்தில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என மாகாண அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments