கொரோனாவின் கோரம்! இத்தாலியில் கடைகளை மூட உத்தரவு!

You are currently viewing கொரோனாவின் கோரம்! இத்தாலியில் கடைகளை மூட உத்தரவு!

இத்தாலியில் கொரோனா வைரல் தொற்றுக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று
கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது இத்தாலியில் கொரோனாவால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது. 12,000 பேருக்கு மேல் தொற்று நோய்கு உள்ளாகியுள்ளனர்.

இத்தாலியில் கொரோனா இறப்பு வீதம் 31 வீதத்தால் அதிகரித்ததை அடுத்து இத்தாலியில் உணவுக் கடைகள், மருந்தகங்கள், போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர அனைத்து கடைகளையும் எதிர்வரும் 25 திகதி வரை மூடுமாறு இத்தாலிப் பிரதமர் கியூசெப் கோன்டே உத்தரவிட்டார்.

பொதுப் போக்குவரத்துக்கள், தபால் சேவைகள், நிதி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும் எனவும் உணவகங்கள், கோப்பி அருந்தகங்கள், மதுபான கடைகள் மற்றும் அத்தியாவசியமில்லாத கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இணைய வழி வீட்டு விநியோகங்களையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க முடியும் எனவம் ஆனால் அவர்கள் முன்னெச்சரிகையாக செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது

கொரோனா தொற்று நோயால் இத்தாலியின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள