கொரோனாவை பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள் – பிரகாஷ்ராஜ் வேதனை!

You are currently viewing கொரோனாவை பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள் – பிரகாஷ்ராஜ் வேதனை!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு பொதுமக்களை வெளியே செல்லாமல் வீட்டில் இருங்கள் என்று வற்புறுத்தி வருகிறார்கள். இதையும் மீறி பலர் வெளியில் சுற்றுவதாக பிரபலங்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்

காய்கறி கடைகளில் விதிமுறையை மீறி கூட்டம் சேருகிறது. டெல்லியில் பஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கொரோனா சமூக பரவலாக மாறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த செயலை சாடி, நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “‘கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். நான் எனது மகனோடு வீட்டில் நேரத்தை கழிக்கிறேன்”. இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள