கொரோனா அமெரிக்கா : மே 1 இல் வழமைக்கு திரும்ப தயாராகும் அமெரிக்கா!

  • Post author:
You are currently viewing கொரோனா அமெரிக்கா : மே 1 இல் வழமைக்கு திரும்ப தயாராகும் அமெரிக்கா!

அமெரிக்கா நோய்த்தொற்றின் உச்சத்தை நெருங்குகிவரும் இந்த வேளையில், மே 1 இல் நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப தயாராக இருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump நம்புவதாக ABC News தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று, அமெரிக்கா 20,000 கொரோனா இறப்புகளைக் கடந்து, அதிக இறப்புகளைக் கொண்ட நாடாக திகழ்கின்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில், வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்தே நாட்டை மீண்டும் திறக்க ஜனாதிபதி Donald Trump ஆர்வமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரு கட்டத்தில், தவக்கால பண்டிகைக்கு முன்னர் நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப முடியும் என்று Donald Trump கூறியது பல நிபுணர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளானதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது Trumpபின் நிர்வாகத்தில் பலர், மே 1 மீண்டும் நாடு வழமைக்கு திரும்ப ஒரு யதார்த்தமான திகதி என்று கூறியுள்ளனர் என்று, Reuters மற்றும் ABC News போன்ற செய்தி நிறுவனங்கள் எழுதியுள்ளன.

பகிர்ந்துகொள்ள