கொரோனா அமெரிக்கா : 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்!

  • Post author:
You are currently viewing கொரோனா அமெரிக்கா : 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்!

விரைவில் கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், அமெரிக்காவில் 2022வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் “Harvard T.H. Chan School of Public Health” வெளியிட்டு உள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோடை காலத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிடும் என்பதில் இருந்து முற்றிலும் முரணானதாகவே உள்ளது. விரைவாக கொரோனாவுக்கான மருந்து கண்டறியப்படவில்லை என்றால், 2022ஆம் ஆண்டுவரை அமெரிக்கர்கள் கட்டாயம் சமூக விலகலை கடைபிடிப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

பிற வைரஸ் கிருமிகளை வைத்து , கொவிட்-19ன் அடிப்படை கொண்டு, அது அடுத்த நிலையில் எப்படி இருக்கும் என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

அதில், அந்த வைரஸ் தொற்று ஒருவேளை 2022ஆம் ஆண்டிற்குள் மறைந்துவிடும். ஆனால் மீண்டும் 2024ஆம் ஆண்டுக்கு பின் பரவலாம் என்று அதில், ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஒருவேளை தற்போது நீடித்துவரும் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்தினால், கொரோனா வைரஸ் மீண்டும் நிச்சயம் வேகம் எடுக்கும். இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் Harvard ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா அமெரிக்கா : 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்! 1

பேராசிரியரான டாக்டர் மார்க் லிப்ஸ்டிச் கூறும் போது நீண்ட அணுகுமுறை மூலம் மருந்து கண்டறிய வழிவகை செய்யலாம். ஆனால், அதற்கு நிச்சயம் அதிக காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

சமூக விலகல்தான், மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் என்றும் மேலும், சமூக இடைவெளியை நாம் அதிகரிக்க முடிந்தால் வைரஸ் தொற்றின் தாக்கத்தை குறைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள