கொரோனா எதிரொலி : மனநோய் உள்ளவர்கள் அறைகளில் அடைக்கப்படலாம்!

  • Post author:
You are currently viewing கொரோனா எதிரொலி : மனநோய் உள்ளவர்கள்  அறைகளில் அடைக்கப்படலாம்!

நோய்த்தொற்று ஆலோசனையைப் பின்பற்ற முடியாத, வயதானவர்களை தனிமைப்படுத்த பராமரிப்பு இல்லங்களுக்கு (Sykehjem) உதவி கிடைக்காது!

மனநோய் (மூளைத்தேய்வு) நோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் இப்போது அறைகளின் உள்ளே பூட்டப்படலாம்.

ஆலோசனையைப் பின்பற்ற முடியாத, அதை புரிந்து கொள்ளாத வயதானவர்களை தனிமைப்படுத்த உள்ளூர் பராமரிப்பு இல்லங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது சிறந்த தீர்வாக அமையுமா என்பதில் முதியோர் மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

கொரோனா நெருக்கடியினால் பொது மருத்துவ இல்லங்கள் மற்றும் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உறவினர்கள் வருகை மறுக்கப்படுகின்றது, தொற்று பரவாமல் இருக்க ஊழியர்கள் சோதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், இங்கு வசிப்பவர்களில் பலர் மூளைத்தேய்வு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், விதிகளை பின்பற்றவோ அல்லது மறுக்கவோ அவர்களால் முடியாவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?

நோர்வே பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்களில் 80 விழுக்காடு பேருக்கு மூளைத்தேய்வு நோய் உள்ளது.

வியாழக்கிழமை இரவு, ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் ஏழு நீண்டகால குடியிருப்பாளர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: Aftenposten

பகிர்ந்துகொள்ள