கொரோனா தவறுகள் ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி!

  • Post author:
You are currently viewing கொரோனா தவறுகள்  ; சோதனையில் தவறான பதிலைப் பெற்றவர் கொரோனாவுக்கு பலி!

கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று மார்ச் மாதம் கூறப்பட்ட 22 நோயாளிகளில் ஒருவர் இப்போது கோவிட் -19 காரணமாக இறந்துள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் Elverum மருத்துவமனையில் இவர் இறந்துள்ளார் . இதை இன்று ஞாயிறு காலை மருத்துவமனையை உறுதிப்படுத்தியுள்ளது.

மருத்துவமனை கூறுகையில்:

– “Innlandet மருத்துவமனையில் கோவிட் -19 தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதான நோயாளி ஏப்ரல் 04 சனிக்கிழமை இறந்துள்ளார். நோயாளிக்கு பிற அடிப்படை நோய்கள் இருந்தன, மேலும் இவர் நேர்மறையான கொரோனா சோதனை முடிவுக்கு (positiv) பதிலாக எதிர்மறையான பதிலைப் (negativt) பெற்ற நோயாளிகளில் ஒருவர்.”

“சோதனைப் பதில்களின் குழப்பம் நோயின் போக்கையும், நோயாளியின் விளைவையும் பாதிக்கவில்லை. உறவினர்களுடன் கலந்தாலோசித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது, மேலும் இறந்தவர் குறித்த கூடுதல் தகவல்கள் வழங்கப்படவில்லை.” –

Innlandet மருத்துவமனையில் உள்ள நுண்ணுயிரியல் துறையில் கோவிட் -19 க்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரிகளின் ஒரு தொகுதியில் மார்ச் 30 அன்று பிழைகள் கண்டறியப்பட்டதாக VG மார்ச் 31 அன்று எழுதியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது .

பிழைகளின் விளைவாக 22 நோயாளிகள் தவறான சோதனை பதில்களைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள