கொரோனா நியூயார்க் : பூனைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று!

  • Post author:
You are currently viewing கொரோனா நியூயார்க் : பூனைகளுக்கும், வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கும், மேலும் 7 வனவிலங்குகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கொரோனா பரவி இருப்பதாக கால்நடை ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ப்ரான்க்ஸ் வன உயிரியல் பூங்காவில் (Bronx Zoo) கடந்த 5ஆம் தேதி 4 வயதான மலேசியாவின் நாடியா என்ற பெண் புலிக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அந்த புலியிடம் இருந்து மேலும் 4 புலிகளுக்கும், மூன்று ஆப்ரிக்க நாட்டு சிங்கங்களுக்கும் கொரோனா பரவியுள்ளது என்று அந்நாட்டு தேசிய கால்நடை சேவை ஆய்வகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, மனிதர்களிடம் இருந்து இரண்டு வளர்ப்புப் பூனைகளுக்கு வைரஸ் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட உரிமையாளரிடம் இருந்து ஒரு பூனைக்கு கொரோனா பரவி இருப்பதாக கால்நடை ஆய்வக சோதனையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டிற்கு வெளியே விட வேண்டாம் என்றும் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள