“கொரோனா” நோய்க்காலத்தை கட்டுப்படுத்தும் ஜப்பானிய மருந்து!

You are currently viewing “கொரோனா” நோய்க்காலத்தை கட்டுப்படுத்தும் ஜப்பானிய மருந்து!

ஜப்பானிய மருந்தான “Avigan”, “கொரோனா” பாதிப்பின் காலத்தை குறைக்குமென சீன மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

“கொரோனா” தொற்று ஏற்பட்ட 340 பேருக்கு கொடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்ட இம்மருந்தினால், அவர்களின் நோய்க்காலம் 11 நாட்களிலிருந்து 4 நான்கு நாட்களாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜப்பானிய நிறுவனமான, “Fujifilm Toyama Chemical“ தயாரித்துள்ள “Avigan” அல்லது “Favipiravir” என்றழைக்கப்படும் மருந்து “கொரோனா வைரஸ்” எனப்படும் “Covid – 19” வைரசால் தாக்கப்படும் காலத்தை கணிசமாக குறைக்கிறதென, அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஊடகங்களும் தெரிவித்துள்ளன.

ஜப்பானில் சாதாரண தடிமனுக்காக வழங்கப்படும மேற்படி மருந்தை, சீனாவில் “கொரோனா” வால் பாதிக்கப்பட்டவர்கள்மீது பரிசோதித்ததில் இம்மருந்து நோய்க்காலத்தை குறைத்ததோடு, எவ்விதமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் சீன மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இம்மருந்தை பெருமளவில் சீனாவில் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை, இம்மருத்தை உருவாக்கிய ஜப்பானிய நிறுவனமான “Fujifilm Toyama Chemical“ நிறுவனம் சீனாவுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள