“கொரோனா” பரவலின் கேந்திர நிலையமாக ஐரோப்பா! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!! உதவிகளை அள்ளி வழங்கும் “Facebook” மற்றும் “Google” நிறுவனங்கள்!!!

You are currently viewing “கொரோனா” பரவலின் கேந்திர நிலையமாக ஐரோப்பா! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!! உதவிகளை அள்ளி வழங்கும் “Facebook” மற்றும் “Google” நிறுவனங்கள்!!!

“கொரோனா” வைரஸின் பரம்பலின் கேந்திர நிலையமாக இப்போது ஐரோப்பா மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 5000 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதாகவும், 1.36.000 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டவர்களை விடவும், உங்களாவிய ரீதியில், குறிப்பாக ஐரோப்பாவில் அதிகமான பாதிப்புக்களும், “கொரோனா” பரம்பலும் அறிவிக்கப்படுவதாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் “Tedros Adhanom” தெரிவித்துள்ளார்.

“கொரோனா” பரம்பலையிட்டு எந்தவொரு நாடும் அசட்டையீனமாக இருக்கவேண்டாமென வேண்டுகோள் விடுத்திருக்கும் அவர், “கொரோனா” பரம்பலை கட்டுப்படுத்துவதில் சீனா இப்போது அடைந்துள்ள முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் கருத்தில் கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “கொரோனா” பாதிப்பால் பீடிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்கும் நோக்கோடு, “அவசரகால நிதியம்” ஒன்றினை ஆரம்பித்திருக்கும் உலக சுகாதார நிறுவனம், உலகம் முழுவதிலிருந்தும் இந்த நிதியத்துக்கான பொருளாதார உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்த அவசர நிதியத்துக்கு இதுவரை “Facebook” மற்றும் “Google” ஆகிய நிறுவனங்கள் கணிசமான பொருளாதாரத்தை வழங்கியுள்ளன.

பகிர்ந்துகொள்ள