“கொரோனா” பாதிப்பு தொடர்பில் நோர்வே அரசு அறிவித்திருக்கும் அவசர (வேதன) திட்டங்களில் திருப்தியில்லை! தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி!!

You are currently viewing “கொரோனா” பாதிப்பு தொடர்பில் நோர்வே அரசு அறிவித்திருக்கும் அவசர (வேதன) திட்டங்களில் திருப்தியில்லை! தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அதிருப்தி!!

நோர்வேயில், “கொரோனா” பரவலின் பின்னதான அரசின் அவசரகால திட்டங்களில் விதந்துரைக்கப்பட்டிருக்கும், தொழிலார்களுக்கான அவசர கொடுப்பனவுகள் தொடர்பில் தனக்கு திருப்பதியில்லையென, நோர்வேயின் தொழிற்ச்சங்கங்களின் கூட்டமைப்பான “LO” விசனம் தெரிவித்துள்ளது.

சுகவீன விடுப்பின் காரணமாக வீட்டிலிருக்கும் தொழிலாளியொருவருக்கு, அவரது சுகவீன காலத்துக்கான வேதனத்தை, அவரது தொழில் வழங்குநர் வழங்கக்கூடிய வேதனத்தை 15 நாட்களிலிருந்து 2 நாட்களாக அரசு குறைத்திருப்பதானது, தொழில் வழங்குனருக்கு பயனுள்ளதாக அமையும் என்றாலும், வேதனம் பெறும் தொழிலாளியொருவர், தனது வேதனத்தில் சுமார் 40 விகிதத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

“கொரோனா” பரம்பலால், பாடசாலைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ள நிலையில், தமது பிள்ளைகளோடு வீடுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிவிக்கும் மேற்படி அமைப்பு, அரசாங்கம் இது விடயத்தில் மீள்பரிசீலனை செய்யவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள