கொரோனா மீறல்கள் : எல்லை வர்த்தகத்தால் 2000 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப் படுத்தலில்!

  • Post author:
You are currently viewing கொரோனா மீறல்கள் : எல்லை வர்த்தகத்தால் 2000 க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப் படுத்தலில்!

தவக்கால பண்டிகையில் ஸ்வீடன் பயணத்தை கைவிடுமாறு காவல்துறையின் கூறிய ஆலோசனையை புறம்தள்ளி, தவக்கால வாரத்தில் எல்லையைத் தாண்டி Svinesund, Ørje மற்றும் உள்நாட்டில், பொருட்களை வாங்க சென்ற 2,350 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எல்லையைத் தாண்டி பலர் பொருட்களை வாங்க பயணிப்பது ஏமாற்றமளிக்கின்றது. இதனால், அவர்கள் தனிமைப்படுத்தப் படுகின்றார்கள். மேலும், இதனால் அவர்கள் தொற்றுநோயை மீண்டும் கொண்டு வந்து பரப்புவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஏனென்றால், ஸ்வீடனில் நோர்வேயை விட வேறுபட்ட தொற்று நிலை உள்ளது என்று பாதுகாப்பு அதிகாரி Teigen கூறியுள்ளார்.

தவக்கால வாரத்தில் Innlandet வில் தனிமைப்படுத்தப்பட்ட 350 பெரும் பல தடவைகள் எல்லைக் கடப்புகளில் நிறுத்தப்பட்டவர்கள் என்றும் தங்களால் 24 மணிநேரமும், எல்லா இடத்திலும் கவனிக்க முடியாததால் எல்லைக் கடப்புகளை தாண்டியவர்களின் எணிக்கை நிச்சயமாக இதைவிட பெரிதாக இருக்கும் என்றும் பணியாளர் தலைவர் மேலும் கூறியுள்ளார்.

மேலதிக தகவல்: NRK

பகிர்ந்துகொள்ள