கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் அவசர நிலை!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் : உலகம் முழுவதும் அவசர நிலை!

கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்து உள்ளது.

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு  பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக புதிதாக 1,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு நேற்று கொடிய கொரோனா வைரஸ் தொடர்பாக ஒரு சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது. இது அரிதாகப்  பயன்படுத்தப்படும் ஒரு அறிவிப்பு ஆகும். இது நோயைக் கையாள்வதில் மேம்பட்ட சர்வதேச ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ்  பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது எங்களது மிகப் பெரிய  கவலையாகும். இது சீனா மீதான நம்பிக்கையில்லா நடவடிக்கை இல்லை. நோய் பரவுவதை  சமாளிக்க விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக சீன அரசாங்கத்தை பாராட்டினார்.

நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் இப்போது ஒன்றாகச் செயல்பட வேண்டும். நாம் ஒன்றாக செயல்பட்டால் இதை கட்டுப்படுத்த  நிறுத்த முடியும் என அவர் மேலும் கூறினார்.

இது குறித்து இந்திய சுகாதார அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர்  கூறியதாவது;-
சுகாதார அமைச்சகம் உலக சுகாதார அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமல்ல மற்ற நாடுகளில் பரவுகிறது. இந்த வைரஸ் இப்போது இந்தியா உட்பட 21 நாடுகளில் உள்ளது.

சுகாதாரத் துறை அனைத்து விமான நிலையங்களிலும்  ஒரு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. இப்போது ஜனவரி 15 முதல் சீனாவுக்கு பயணம் செய்து வந்துள்ள அனைவரும் வைரஸிற்கான சோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறினார்.

பகிர்ந்துகொள்ள