கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து உள்ளது.

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த மர்ம வைரஸ் காய்ச்சல், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது.  1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து 170 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சையும் பெற்று வந்தனர்.

இந்நிலையில், வைரஸ் தாக்குதலுக்கு 89 வயது நிறைந்த 4வது நபர் பலியாகி உள்ளார் என வுகான் நகர சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருந்தது.

இந்த வைரஸ் வுகானில் 200 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பின்னர் தெரிவித்தது.  இதனை தொடர்ந்து, வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வைரஸ் 440 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து உள்ளது என்றும் சீன சுகாதார அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியப்பட்ட வுகான் நகரிலேயே அனைவரும் பலியாகி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

பகிர்ந்துகொள்ள