கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை, ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தும் அமேசான்

You are currently viewing கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனை, ஒரு லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தும் அமேசான்

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக வீட்டு உபயோக பொருட்களை இணையத்தில் வாங்குவது அதிகரித்துள்ளது என்று கூறும் அமேசான் நிறுவனம் இதனை கையாள்வதற்காக ஏறத்தாழ ஒரு லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து முதல்முறையாக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்பட்டது.

வாஷிங்டன் சியாட்டிலில் உள்ள ஒர் ஆய்வகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி தீர்வாகுமா என்று உடனே சொல்ல முடியாது. அதற்கு சில காலங்கள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பரிசோதனை தடுப்பூசி செலுத்தப்பட்ட 43 வயதான பெண்மணி ஜெனிஃபர், “இந்த பரிசோதனைக்கு உள்ளாவது என் பேறு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள