கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,016 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று, 91 பேர் உயிரிழந்த நிலையில் வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 908 ஆக உயர்ந்தது.  இதேபோன்று 40,171 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.*

இதனிடையே, சீனாவில் கூடுதலாக 108 பேர் உயிரிழந்த நிலையில், வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது. இதில்103பேர் ஹூபே மாகாணத்தில் இறந்துள்ளனர். 2,097 பேர் கூடுதலாக பாதிப்படைந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பகிர்ந்துகொள்ள