breaking கொவிட் 19 மருந்துகளின் பரிசோதனைகளின் பெறுபேறுகள் மே14 வெளியிடப்படும் !!

You are currently viewing breaking கொவிட் 19 மருந்துகளின் பரிசோதனைகளின் பெறுபேறுகள் மே14  வெளியிடப்படும் !!

ஐரோப்பிய மட்டத்தில் சில வைரஸ் தடுப்பு மருந்துகளை நோயாளிகளில் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வெளியிடப்படும் என்று பிரான்ஸின் அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

கொவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து ஒன்றைக் கண்டறியும் நோக்கில் பரந்த அளவில் நோயாளிகளில் நடத்தப்பட்ட முக்கிய சோதனை நடவடிக்கை இதுவாகும்.

தகுந்த சிகிச்சை முறை ஒன்றைக்கண்டு பிடிக்கும் இந்த பரந்துபட்ட ஆய்வு கடந்த மார்ச் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஐரோப்பிய மருத்துவமனைகளில் மிகத் தீவிரமான நிலையில் காணப்பட்ட 3ஆயிரத்து 200 நோயாளிகளில், அவர்களின் சம்மதத்துடன் குளோரோகுயின் உட்பட சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைச் செலுத்தி இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. பிரான்ஸில் 700 நோயாளிகளில் இப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

ஜரோப்பிய நாடுகள் மட்டத்திலான இந்த ஆய்வு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று எனக் குறிப்பிட்டிருக்கும் அதிபர் மக்ரோன், இந்தக் கட்டத்தில் நாம் இன்னும் மிகுந்த விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மே 11 ஆம் திகதி என்பது ஒரு புதிய கட்டம் மட்டுமே எனக் கூறிய அவர், தொடர்ந்து முன்னேறிச் செல்வதா அல்லது பின்னுக்கு நகர்வதா என்பதைத் தீர்மானிக்கப்போகின்ற ஒரு முதல் கட்டம் இது என்று குறிப்பிட்டார்.

பெரும் முடக்கத்தில் இருந்து நாட்டை விடுவிக்கும் திட்டத்தின் முழுமையான விவரங்கள் அனைத்தும் வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

breaking கொவிட் 19 மருந்துகளின் பரிசோதனைகளின் பெறுபேறுகள் மே14 வெளியிடப்படும் !! 1

04-05-2020 (பாரிஸ். – குமாரதாஸன்)

பகிர்ந்துகொள்ள