கோட்டாபயவிற்காக சிங்கப்பூர் அரசிடம் உதவி கோரும் இலங்கை அரசு!

You are currently viewing கோட்டாபயவிற்காக சிங்கப்பூர் அரசிடம் உதவி கோரும் இலங்கை அரசு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் இரண்டு வாரங்களுக்கு சிங்கப்பூரில் தங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் 14 நாட்களுக்கு நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள ராஜபக்ச, ஆகஸ்ட் 11-ஆம் திகதி விசா காலாவதியானதும் இலங்கைக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜபக்ச மேலும் சில காலம் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை 14-ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையத்திற்கு பறந்த ராஜபக்சவிற்கு 14 நாட்கள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, ராஜபக்சேவின் அதிகாரபூர்வ பதவி விலகலை ஜூலை 15-ஆம் திகதி அறிவித்தார்.

பின்னர், விசா முடிவடையவிருந்த நிலையில், மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு புதிய விசாவை சிங்கப்பூர் அளித்தது. அதன்படி, அவர் ஆகஸ்ட் 11 வரை அங்கு தங்கியிருக்கமுடியும் என் தெரியவந்தது.

இதற்கிடையில், இலங்கையின் அதிபராக ஜூலை 21-ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்யா முன்னிலையில் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, சமீபத்தில் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல, ஏனெனில் அவர் இலங்கையில் இருப்பது வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில் அரசியல் பதட்டங்களைத் தூண்டக்கூடும் என்று தெரிவித்திருந்தார்.

இப்போது, நீட்டிக்கப்பட்ட பயண அனுமதியும் முடிவடைய சில நாட்களை உள்ள நிலையில், அவர் மேலும் 2 வாரங்களுக்கு அங்கேயே இருக்க இலங்கை அரசால் அனுமதி கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments