கோத்தபாயவுடன் இணையத் தயார்: சுமந்திரன்

  • Post author:
You are currently viewing கோத்தபாயவுடன் இணையத் தயார்: சுமந்திரன்

முடக்­கப்­பட்­டுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்பு செயற்­பா­டு­களை தொடர்ந்தும் முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை சிறிலங்கா ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ மேற்­கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

குறித்த அர­சி­ய­ல­மைப்பு பணிகள் முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதற்கு தமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தா­கவும் கூட்­ட­மைப்பு மேலும் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்பில் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­விக்­கையில்,

சிறிலங்கா ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ ­நேற்று முன்­தினம் ஆற்­றிய அக்­கி­ரா­சன உரை­யின்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு, வலு­வான பாரா­ளு­மன்றம், சுயா­தீன நீதித்­துறை உள்­ளிட்ட விட­யங்கள் பற்றி கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

2015இல் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றதைத் தொடர்ந்து மக்கள் ஆணைக்கு அமை­வாக ஏக­ம­ன­தான தீர்­மா­னத்­துடன் பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­பட்டு வழிப்­ப­டுத்தும் குழு, உப­கு­ழுக்கள், மக்கள் கருத்­த­றியும் குழு உள்­ளிட்­டவை உரு­வாக்­கப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

ஏறக்­கு­றைய அச்­செ­யற்­பா­டுகள் இறு­திக்­கட்­டத்­தினை அடைந்­தி­ருந்த நிலை­யி­லேயே அர­சியல் குழப்­ப­நி­லைகள் உள்­ளிட்ட கார­ணங்­களால் தொடர்ந்து அப்­ப­ணி­களை முன்­னெ­டுக்க முடி­யாது முடக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த ­போது தற்­போ­தைய ஜனா­தி­பதி சார்ந்­தி­ருக்கும் தரப்பின் உறுப்­பி­னர்­களும் பங்­கேற்­றி­ருந்­தார்கள். வழிப்­ப­டுத்தும் குழுவின் உறுப்­பி­னர்­க­ளா­கவும் மத்­திக்கும் மாகா­ணத்­துக்கும் இடை­யி­லான அதி­கா­ரப்­பங்­கீடு பற்றி ஆராய்­வ­தற்­காக உரு­வாக்­கப்­பட்ட உப­குழு உள்­ளிட்­ட­வற்றின் உறுப்­பி­னர்­க­ளா­கவும் இருந்­துள்­ளனர்.

குறிப்­பாக, தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன, சுசில் பிரேம்­ஜயந்த, பிர­சன்ன ரண­துங்க ஆகியோர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களில் முழு­மை­யாக பங்­கேற்­றி­ருந்­தார்கள்.

ஆகவே மீண்டும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் முயற்­சி­களை முன்­னெ­டுப்­ப­தாக இருந்தால் ஏறக்­கு­றைய பணிகள் பூர்த்­தி­ய­டையும் நிலையில், தற்­போ­தைய பாரா­ளு­மன்ற காலத்தில் முன்னெடுத்த அந்த பணிகளை முன்னெடுக்க முடியும்.

மீண்டும் ஒருதடவை காலத்தினை வீணடிப்பதை விடவும் குறித்த முன்மொழிவுகள் தொடர்பாக மீளாய்வு செய்து அச்செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கு மாகவிருந்தால் நாம் அதற்கு ஒத்து ழைப்புக்களை வழங்குவதற்கு தயா ராகவே இருக்கின்றோம் என்றார்.

பகிர்ந்துகொள்ள