சசிகலாவின் ஆசனத்தை சூறையாடிய சுமத்திரன்!

You are currently viewing சசிகலாவின் ஆசனத்தை சூறையாடிய சுமத்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் துரோகியாக இருந்து தமிழ் மக்களின் தியாகங்களை கொச்சைப்படுத்திய சுமந்திரன் மக்களால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், தற்போது மோசடி முறையில் வெற்றிபெற்றார் என யாழ்ப்பாணம் தேர்தல் வாக்கெண்ணும் நிலைய முடிவுகள் தெரிவித்துள்ளன. 

வாக்குகள் எண்ணப்பட்டதன் அடிப்படையில், ஏற்கனவே சிறிதரனுக்கு அடுத்ததாக, இரண்டாவதாக வெற்றிபெற்றவர் என அறிவிக்கப்பட்ட திருமதி சசிகலா ரவிராஜ் நீக்கப்பட்டு, தோற்கடிக்கப்பட்ட சுமந்திரன் மீண்டும் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதால் தமிழ் மக்கள் வாக்களிக்காமல் புறக்கணித்து தோற்கடித்து சுமந்திரன் ஐந்தாவது நிலைக்கு பின்தள்ளப்பட்டார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு யாழ்.தேர்தல் தொகுதியில் மூன்று ஆசனங்கள் கிடைத்த நிலையில், சி. சிறிதரன், திருமதி சசிகலா, த.சித்தார்த்தன் ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நான்காம் இடத்திலும் எம்.ஏ.சுமந்திரன் ஐந்தாவது இடத்திலும் இருந்தனர். 

இந்நிலையில், இன்று பிற்பகல் 4.00 மணியில் இருந்து சசிகலாவிற்கு கடும் அழுத்தம் கொடுத்து, அவரை மிரட்டி, அச்சுறுத்தி அவரது இடத்தை பறிக்க முற்பட்டார் சுமந்திரன். தொடர்ந்து சித்தார்த்தனை அப்புறப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றன. 

இந்நிலையில், இறுதியாக வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்த யாழ். மத்திய கல்லூரிக்கு விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் வந்த சுமந்திரன் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தினார். 

இதனால், இரண்டாவது நிலையில் இருந்த சசிகலா தோல்வியடைந்தவர் என அறிவிக்கப்பட்டு ஐந்தாம் இடத்தில் இருந்த சுமந்திரன் வெற்றி பெற்றவர் என தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 

இதேவேளை மாமனிதர் ரவிராஜின் குடும்பம் வாக்கு எண்ணும் நிலையத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறிச் சென்றது. 

பகிர்ந்துகொள்ள