சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த நடுக்கடலில் 55 பேர் மீட்பு!

You are currently viewing சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த நடுக்கடலில் 55 பேர் மீட்பு!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த போது அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்கே சுமார் 390 கடல் மைல் தொலைவில் கடும் காற்றில் சிக்கித் தவித்த மீன்பிடி இழுவைப் படகில் இருந்த 55 பேரை இலங்கை கடற்படை மீட்டுள்ளது. குறித்த படகு அனர்த்தத்தை எதிர்கொண்ட நிலையில், இலங்கை கடற்படையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தினூடாக அவர்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத பயணத்துக்கு உதவிய 5 பேரும் 46 ஆண்களும் 3 பெண்களும் 6 சிறுவர்களும் அடங்கலாக 55 பேர் குறித்த படகில் பயணித்ததாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

பலத்த காற்றினால் இவர்கள் பயணித்த படகு சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்தமையால், அதனை கரைக்கு எடுத்து வர முடியாது போயுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளத்தை சேர்ந்தவர்களே கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments