சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா அதிரடி உத்தரவு

  • Post author:
You are currently viewing சந்தேகத்திற்கிடமானவர்களை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா அதிரடி உத்தரவு

சீனாவின் வுகான் நகரில் சந்தேகத்திற்கிடமான அனைத்து கொரோனா வைரஸ் நோயாளிகளையும் சுற்றி வளைத்து தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்க சீனா உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் அனைத்து நோயாளிகளையும், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் வைக்கவும், அவர்களின் நெருங்கிய தொடர்புடையவர்களையும் சுற்றி வளைக்கவும் சீனாவின் மத்திய அரசு வுகான் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சீன அரசு இந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க துவங்கும் முன்பே வுகான் நகரை விட்டு அண்டை மாநிலங்களுக்கு பயணம் செய்தவர்களால்தான் சீனாவில் கொரோனா பரவ துவங்கியது என்று துணை ஜனாதிபதி சன் சுன்லான் கோரியுள்ளார்.

வேகமாக பரவி வரும் தொற்றுநோய்க்கு எதிராக நாட்டின் துணைப் பிரதமர் சன் சுன்லான் ‘மக்கள் யுத்தத்திற்கு’ தயாராகுமாறு அழைப்பு விடுத்து உள்ளார்

இந்த ‘போர்க்கால நடவடிக்கையில் ‘ அனைத்து மட்டங்களிலும் உள்ள கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தீவிரமாக முன்னிலை வகித்து பணியாற்ற வேண்டும், அல்லது தேச துரோகி ஆகிவிடுவீர்கள் என்று அவர் எச்சரித்து உள்ளார்.

இந்த நகரத்தில் சுமார் 14 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. ஆனால் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்படுவார்கள் அல்லது அவர்கள் எங்கு வைக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.

தனிமைப்படுத்தப்பட வேண்டிய கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேக நபர்களை அடையாளம் காண வுகான் அதிகாரிகள் இப்போது வீட்டுக்கு வீடு சுகாதார சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள