சந்தைக்கு வரும், உலகின் முதலாவது செயற்கை இதயம்!

You are currently viewing சந்தைக்கு வரும், உலகின் முதலாவது செயற்கை இதயம்!

மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதலாவது செயற்கை இதயம், மிக விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“Carmat” என்றழைக்கப்படும், முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கக்கூடிய உலகின் முதல் செயற்கை இதயம் இவ்வருட நடுப்பகுதியில் சந்தைப்படுத்தப்பட இருப்பதாகவும், குறிப்பாக ஐரோப்பாவில் சந்தைப்படுத்துவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாகவும், இச்செயற்கை இதயத்தை வடிவமைத்திருக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக ஆபத்தான இதய நோய்களுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் இதய மாற்று அறுவை சிகிச்சைகளின்போது, “தற்காலிக” மாற்று இதயமாக செயற்படக்கூடிய விதத்தில் இச்செயற்கை இதயம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 5 வருடங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தக்கூடியதாகவும், நிமிடமொன்றுக்கு 5 லிட்டர்கள் இரத்தத்தை உடலெங்கும் பாய்ச்சும் திறன் கொண்டதாகவும், வருடத்துக்கு 40 மில்லியன் தடவைகள் துடிக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

உலகப்புகழ் பெற்ற, பிரான்சின் “Airbus” நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இச்செயற்கை இதயம், நோயாளியொருவரின் இயற்கையான இதயத்தை எடுத்து விட்டு, அதற்க்கு பதிலாக பொருத்தக்கூடியது எனவும், இயற்கையான இதயம் போலவே அனைத்து இதயங்களிலும் தொழிற்படக்கூடியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வருட ஆரம்பத்தில் டென்மார்க்கில் ஒரு இதய நோயாளியில் இது பரீட்சித்து பார்க்கப்பட்டதன்பின் இசசெயற்க்கை இதயம் தொடர்பிலான செய்திகள் வெளிவரத்தொடங்கின.

மனித உடலில் பொருத்தப்பட்டபின், அவ்வுடலுக்கு ஏற்றதுபோல் தன்னை இசைவாக்கமடைய வைக்கும் திறன் கொண்ட இச்செயற்கை இதயம், நோயாளியின் மூச்சு விடும் தனமைக்கேற்பவும் தன்னை இயங்க வைக்கும் திறன் வாய்ந்ததெனவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள