சர்வதேச அகதிகள் தினம் இன்று.

  • Post author:
You are currently viewing சர்வதேச அகதிகள் தினம் இன்று.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அகதிகளாக வாழ்வோர் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சர்வதேச அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் 2000 ஆம் ஆண்டு சர்வதேச அகதிகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

ஆபிரிக்க அகதிகள் தினமாக நினைவுகூரப்பட்ட இந்த தினம் பின்னர் சர்வதேச அகதிகள் தினமாக அறிவிக்கப்பட்டது.

உலகளாவிய ரீதியில் 6 கோடியே 60 இலட்சம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

2014, 2015 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 50 இலட்சத்தினால் அதிகரித்ததாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

அரசியல் அடைக்கலம் கோருவோர் மற்றும் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தவர்கள் இதில் அடங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டுகிறது.

அதிகளவில், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே புகலிடக் கோரிக்கையாளர்கள் பட்டியலில் காணப்படுவதாகவும் ஐ.நா.வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்களில் அதிகளவானோர், பிரித்தானியாவில் குடியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள