சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் தமிழ் இறையாண்மையும். பேரம் பேச முடியுமா?- பைடனுக்கான தமிழர்கள்!

You are currently viewing சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் தமிழ் இறையாண்மையும். பேரம் பேச முடியுமா?- பைடனுக்கான தமிழர்கள்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டில் மனித குலத்திற்கு எதிரான குற்றத்தை, குற்றவாளியாக குறைத்து இறையாண்மையை பரிமாறிக்கொள்வதற்காக கடந்த காலங்களில் பல நாடுகளில் திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தின. கிழக்கு திமோர், போஸ்னியா, கொசாவோ மற்றும் தெற்கு சூடான் என்பன குறிப்பிடத்தக்கது.

போர்க் குற்றவாளி கோட்டாபய ராஜபக்சவின் கும்பல்களும் பாதிக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஒப்புக்கொண்டால், இறையாண்மைப் பெற பேரம் மற்றும் போர்க்குற்றத்திற்கான நீதியை தேர்ந்தெடுத்து சரிசெய்தல் போன்றவற்றில் உதவி செய்வதற்கு பைடனுக்கான தமிழர்கள் உறுதி அளிக்கின்றனர்

இன்னும் அரசியல் ரீதியாக கோட்டா ராஜபக்ச ஸ்ரீலங்காவில் பலமாக இருக்கிறார். அவர் மீண்டும் ஸ்ரீலங்காவுக்கு வருகிறார். அவருக்கு இன்னும் 65% சிங்கள பௌத்தர்களின் ஆதரவு உள்ளது.

கோட்டா ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதாக சில நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் பேராயர் மேதகு இராஜப்பு கணக்கீட்டின்படி, போரின் முடிவில் படுகொலை செய்யப்பட்ட 1,45,000 தமிழர்கள், கணவனை இழந்த 90,000 பெண்கள், பெற்றோரை இழந்த 50,000 குழந்தைகள் என பதிவு தமிழர்கள் செய்துள்ளனர்,

“இந்த பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அனைவரும் தயாராக இருந்தால், தமிழ் இறையாண்மையை அடைவதற்காக பேச்சுவார்த்தை நடத்த பலம் வாய்ந்த சர்வதேச நாடொன்றை அழைத்து வருவதற்கு பைடனுக்கான தமிழர்கள் நாம் தயாராக இருக்கிறோம்,” என்கின்றனர்.

போர்க் குற்றவாளி கோட்டாபய ராஜபக்சவின் கும்பல்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களும் ஒப்புக்கொண்டால், பைடனுக்கான தமிழர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா மற்றும் உலகின் பிற நாடுகளுடன் உரையாடலைத் தொடங்குவார்கள் – குறிப்பாக மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் போரில் தங்கள் உறவினர்களை இழந்த தமிழர்கள் மற்றும் இலங்கையால் கடத்தப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் யாவருடனும்.

தமிழர் இறையாண்மைக்கு ஈடாக இலங்கையின் 52 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதற்கு நாங்கள் முன்னர் நேர்மையாக முன்வந்தோம். இந்த வாய்ப்பை ஸ்ரீலங்கா ஏற்கவில்லை.

பைடனுக்கான தமிழர்களின் செய்தித் தொடர்பாளர் மேலும் , “ஸ்ரீலங்கா அவர்களின் தற்போதைய நெருக்கடியிலிருந்து தப்பிக்க இது அவைகளுக்கு இரண்டாவது வாய்ப்பு . கடந்த 80 ஆண்டுகளாக ஸ்ரீலங்காவை பொருளாதார ரீதியில் பின்னுக்குத் தள்ளும் தமிழர்களின் இறையாண்மைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், ஸ்ரீலங்கா சர்வதேச சமூகத்தால் புதுப்பொலிவு பெறுவதுடன், உண்மையிலேயே வளர்ச்சியடையும் வாய்ப்பும் கிடைக்கும். அது ஸ்ரீலங்காவை காப்பாற்றி, புதிய இறையாண்மையுள்ள அண்டை நாடான தமிழீழத்துடன் ஸ்ரீலங்காக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கும்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments