சர்வதேச தலையீட்டினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – மகிந்த!

  • Post author:
You are currently viewing சர்வதேச தலையீட்டினை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – மகிந்த!

கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஸ பிராந்திய பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் உத்தியோகத்தர்கள் கல்லூரியின் பட்டமளிப்பு தாமரைத் தடாகத்தில் இன்று பகல் இடம்பெற்றது.

இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததாவது,

நாங்கள் சிறிய நாடாக உள்ள நிலையில், பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இந்திய தேசத்தவர்கள் ஈடுபடவில்லை.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் இலங்கையர்களே. இந்த விடயம் எமது நாட்டிற்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. இந்த வலயத்திலுள்ள ஏனைய நாடுகளின் நன்மைக்காக இந்தப் பயங்கரவாதத்தை நாங்கள் இல்லாதொழிக்க வேண்டும்.

இந்த வருடம் இலங்கையில் பயங்கரவாதிகள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்ததாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

எம்மால் இதனை கட்டுப்படுத்த முடியாமையால் இந்தியா , மாலைத்தீவு மாத்திரமின்றி மியன்மார், தாய்லாந்து உட்பட அதனை அண்மித்துள்ள நாடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் காணப்பட்டது. அதனால் இந்த புதிய பயங்கரவாத அச்சுறுத்தலை தோற்கடிக்க வேண்டும். எமது இராணுவப் படைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் சில வௌிநாட்டுத் தரப்புகள் எதிர்க்கும் நிலைப்பாடுகளும் காணப்படுகின்றன. தமது இராணுவத்தின் உள்விவகாரத்தினுள் வௌிநாட்டுத் தலையீடுகளை மேற்கொள்ள இறையாண்மை உள்ள நாடுகள் அனுமதிப்பதில்லை.

பகிர்ந்துகொள்ள