சர்வதேச பரவலைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு! ; உலக சுகாதார அமைப்பு.

  • Post author:
You are currently viewing சர்வதேச பரவலைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் குறைவு! ; உலக சுகாதார அமைப்பு.

புதிய கொரோனா வைரஸின் சர்வதேச பரவலைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.

சீனாவில் வைரஸ் மையம் கொண்ட பகுதியான ஹுபெய் மாநிலத்திற்கு வெளியே குறைந்த எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றுகள் இருப்பதால் உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் Tedros Adhanom Ghebreyesus பல வாரங்களாக சுட்டிக்காட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை, ஈரான், தென் கொரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இது உலக சுகாதார அமைப்பின் தலைவவரின் கூற்றை கேவிக்குறியாக்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள