சிங்களம் தமிழர்களுடன் பேசுவது இரண்டு காரணங்களுக்காக என்பதை முதலில் நாம் உணர வேண்டும்!

You are currently viewing சிங்களம் தமிழர்களுடன் பேசுவது இரண்டு காரணங்களுக்காக என்பதை முதலில் நாம் உணர வேண்டும்!

சிங்களம் தமிழர்களுடன் பேசுவது இரண்டு காரணங்களுக்காக என்பதை முதலில் நாம் உணர வேண்டும்! 1

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

இன்று 2142வது நாள், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது.

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது. உங்கள் உறுதியையும் அசைக்காமல் வைத்திருங்கள், நீங்கள் எப்போதும் மகிமை வழியில் நடப்பீர்கள். தைரியம், நம்பிக்கை மற்றும் மிகுந்த முயற்சியுடன், நீங்கள் விரும்பும் அனைத்தையும் அடைவீர்கள்.

தாயகம் மற்றும் புலம் வாழ் தமிழர்களுக்கு நமது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து கவனம் செலுத்த வேண்டும். 75 வருடங்களுக்கு மேலாக அரசியல் தீர்வு என்ற பெயரில் நாம் தொடர்ந்து செல்ல முடியாது.

சிங்களம் தமிழர்களுடன் பேசுவது இரண்டு காரணங்களுக்காக என்பதை முதலில் நாம் உணர வேண்டும். முதல் காரணம், அரசாங்கத்தை தமிழரின் உதவியுடன் அமைப்பதற்க்கு, இரண்டாவது காரணம் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறுவதற்க்கு.
இந்த நேரத்தில் நாம் வலுவாக இருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அரசியல் தீர்வை எவ்வாறு காண்பது? தெற்கு சூடான், எரித்திரியா, கொசோவா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த ஐ.நா.வின் கண்காணிப்பு வாக்கெடுபே ஒன்றே சிறந்த வழி.

செக் மற்றும் ஸ்லோவாக்கியா என்று இரண்டு நாடுகளைப் பிரித்த செக்கோஸ்லோவாக்கியாவைப் போன்ற ஒரு தீர்வை நாம் இணக்கமாக விவாதிக்கலாம். ஆனால் சிங்களவர்கள் ஒருபோதும் சுமுக தீர்வுக்கு வரமாட்டார்கள்.

1977 ஆம் ஆண்டு முதல் தமிழர் இறையாண்மை கொண்ட நாட்டிற்காக தேர்தலில் தமிழர்கள் வாக்களிக்கதத்னர். கடந்த தேர்தல்களில் TULF மற்றும் TNA அதிக வெற்றிகளைப் பெற்றதற்கு இதுவே முக்கிய காரணம். TNA ஒற்றையாட்சி மாநில எக்கிய ராஜ்ஜாவை ஆதரிக்கத் தொடங்கியதால், கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 10க்கும் மேற்பட்ட ஆசனங்களை பாராளுமன்றத்தில் இழந்தது..

நோர்வே தூதர் எரிக் சோல்கைம், ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க விரும்புவதை இப்போது நாம் காண்கிறோம். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக மீண்டும் வரவதற்கு இரகசியமாக செயற்பட்டு வருகின்றார். நாங்கள் அதை எதிர்க்கவில்லை, ஆனால் மேற்கு தேச அரசியல் கட்டமைப்பை மேசைக்கு கொண்டு வர விரும்புகிறோம். சாத்தியமான அரசியல் தீர்வுகள் கனடா மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து நகல் எடுக்கப்படலாம் அல்லது நன்கு வரையறுக்கப்பட்ட கூட்டாட்சி, கொண் பெடெரலிசம்.

ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு, எங்களிடம் 3 சாத்தியமான அரசியல் தீர்வுகள் உள்ளன:

1. தமிழர் இறையாண்மை
2. மேற்கத்திய பாணி ஜனநாயகம்
3. ரணில்-சம்பந்தன் ஒப்பந்தத்தில் இருந்து தீர்வு

இதைத்தான் எங்கள் பதாகையில் எழுதியுள்ளோம்.

முழு உலகமும், குறிப்பாக இலங்கை கண்காணிப்பு குழுக்கள் (SLMM) மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பெரும் பங்கை ஐ.நா கண்காணிக்கும் வாக்கெடுப்புக்கு நடத்த பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.

புலம்பெயர் தமிழ் மக்கள் எமது தமிழ் இறையாண்மை மிக்க தேசத்தில் முதலீடு செய்து அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றமையால், அரசியல் தீர்வு விடயத்தில் எமது நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை.

நன்றி
கோ.ராஜ்குமார்
செயலாளர்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.
1/1/2023

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments