சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை நினைவு நாள்!

You are currently viewing சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை நினைவு நாள்!

யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில் :யாழ் நாகர்கோயில் நாகேஸ்வரா வித்தியாலயம்: அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது. பின்னர் 1967 இல் யாழ்.நாகர்கோயில் மகாவித்தியாலமாகத் தரம் உயர்த்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக மயிலிட்டிக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களில்; அறுநூறு குடும்பங்கள் நாகர்கோயிலிற்கு இடம்பெயர்ந்தன. நாநூறு மாணவர்களைக் கொண்டிருந்த பாடசாலையின் மாணவர் தொகை எழுநூறாக உயர்ந்தது. 1991ஆம் ஆண்டு ஆனையிறவுப் பகுதியில் நடைபெற்ற சண்டையினால் வெற்றிலைக்கேணி, ஆழியவளை, கட்டைக்காடு போன்ற கிராமமக்களும் நாகர்கோயிலிலேயே தஞ்சமடைந்தனர். 1993ஆம் ஆண்டுக்குப் பின்பு மாணவர்களின் எண்ணிக்கை எண்ணூற்றுமுப்பதாக அதிகரித்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துக் காணப்பட்டது.

1995ஆம் ஆண்டு செப்ரெம்பர் இருபத்தோராம் திகதி வடமராட்சியின் பல பாகங்களுக்கும் பலாலியிலிருந்து இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர். மறுநாள் இருபத்திரண்டாம் திகதி வெள்ளிக்கிழமை 6:30 மணிக்கு வடமராட்சி கிழக்குப் பகுதியில் விமானப்படையின் “புக்காரா” குண்டுவீச்சு விமானம் மணற்காடு கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அருகில் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் தேவாலயம் சேதமடைந்ததுடன், மணற்காட்டைச் சேர்ந்த இரத்தினம் அன்ரனிதாஸ் (எட்டு வயது), மனோகரதாஸ் மரியஜித் (பத்து வயது), ஜோன்பொஸ்கோ கார்மிளா (ஐந்து வயது) ஆகிய மூவரும் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்தனர். அன்றைய தினம் (22.09.1995) வடமராட்சி கிழக்கில் காலை பதற்றமாக இருந்தபோதும் நாகர்கோயில் மகா வித்தியாலயத்துக்கு வழமைபோல மாணவர்கள் வந்தனர்

 அன்றையதினம் எண்ணூற்றுமுப்பது மாணவரில்; எண்ணூற்றுபத்து மாணவர்கள் வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் இறைவழிபாடு ஆரம்பித்தது. இறைவழிபாட்டினைத் தொடர்ந்து நற்சிந்தனை இடம்பெற்றது. அன்றைய நற்சிந்தனையினை ஏழாம்; ஆண்டில் கல்விகற்கும் “நவரத்தினசாமி உமாதேவி” எல்லோரையும் கவரக்கூடிய விதத்தில் இனிய குரலில் இருபத்தைந்து நிமிடம் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள்.மதியம் 12:45 மணியளவில் வகுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாகர்கோயில் வான்பரப்பிற்குள் பிரவேசித்த விமானப்படையின் இரண்டு “புக்காரா” விமானங்களிலிருந்தும் மாறி, மாறி எட்டு றொக்கட் குண்டுகள் பாடசாலையையும், கிராமத்தையும் நோக்கி வீசப்பட்டதினால் அப்பிரதேசம் புகைமண்டலமானது. இத்தாக்குதலில் காலைப் பிரார்த்தனையில் எல்லோராலும் பாராட்டப்பட்;ட “நவரத்தினசாமி உமாதேவி” உட்பட எழு மாணவர்கள்; பாடசாலையினுள் உயிரிழந்தார்கள். படுகாயத்துடன் உயிருக்காகப் போராடிய பதின்மூன்று மாணவர்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியிலும், வைத்தியசாலையிலும் இறந்தனர். மேலும் நாற்பத்திரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். இன்னும் சில மாணவர்கள் தமது உடல் உறுப்புக்களை இழந்தனர். அன்று நடந்த புக்காராக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவர்களுடன் நாகர்கோவில் கிராமத்தைச்சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களும் உயிரிழந்ததுடன், எண்பத்தைந்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தார்கள். அன்றைய தாக்குதலில் இருபது மாணவர்கள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்தனர். நாற்பத்திரண்டு மாணவர்கள் உட்பட நூறு பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..

இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..இச்சம்பவத்தில் வலது காலை இழந்த ச.சிறிவித்தியா கூறுகையில் …..

“அன்று புக்காரா விமானம் பாடசாலை அருகில் முதல் குண்டை போட்டவுடன் எல்லோரும் சிதறி ஓடினோம். அப்போது மீண்டும் விமான இரைச்சல் சத்தம் பெரிதாகக் கேட்ட போது நான் பாடசாலையிலுள்ள அத்திமரத்தின் கீழே விழுந்து படுத்துவிட்டேன். குண்டு பாடசாலை வளாகத்திற்குள் விழுந்து வெடித்தது பாடசாலை முழுக்க புகை மண்டலமாக இருந்தது, எங்கும் ஓரே அழுகுரல்கள் கேட்டது. நானிருந்த இடத்தில் இருந்து தலையைத் துக்கிப் பார்த்த போது எங்கும் இரத்தமாக இருந்தது. எனது உடம்பிலும் காலிலும் காயமடைந்திருந்தேன் அப்போது நான் அத்திமரத்தை விட்டு எனக்கருகிலிருந்த எனது ஒன்றுவிட்ட சகோதரியையும் கூட்டிகொண்டு ஓடும் நோக்குடன் எழும்ப முயன்ற போது என்னால் ஓடமுடியாமற் போய்விட்டது. அந்தநேரம் எனது அண்ணாதான் வந்து என்னைத் தூக்கிக்கொண்டுபோய் மந்திகை வைத்தியசாலையிற் சேர்த்தார். அங்கு எனது வலது காலினைக் கழற்றினார்கள். அத்துடன் எனது வலது கையையும் கழற்ற வேண்டுமென்று கூறினார்கள். பின்னர் யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று குணமடைந்தேன்.

சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை நினைவு நாள்! 1

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments