சிங்கள பேரினவாத அரசை பாதுகாக்கும் முயற்சியில் ஐ.நாவில் களமிறங்கியுள்ள நாடுகள்!

You are currently viewing சிங்கள பேரினவாத அரசை பாதுகாக்கும் முயற்சியில் ஐ.நாவில் களமிறங்கியுள்ள நாடுகள்!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வின் முதல் நாளின் போது, சீனாவை தவிர ரஷ்யா, ஈரான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகள், இலங்கையை பாதுகாக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

அத்துடன் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் பேரவை முன்மொழிந்துள்ள தீர்மானத்திற்கு தங்கள் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன.

ரஷ்ய தூதுவரின் தகவல்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையை நாடகமாக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று ரஷ்ய தூதுவர் கூறினார்.

சீனாவின் தூதர் ஐக்கிய நாடுகளின் 46-1 தீர்மானத்தை கடுமையாக சாடினார், இது அரசியல்மயமாக்கலின் தயாரிப்பு என்றும் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் பேரவையானது அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட அழுத்தம் காரணமாக உண்மையான ஊக்குவிப்பு மற்றும் மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது வட கொரியாவின் பிரதிநிதி குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு ஒரு இராணுவ சதியை சூடான், 2009 போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை தொடர்பில் இலங்கையை பாராட்டியது.

எனினும் அதன்போது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் போர்க்குற்றங்கள் என்பவை தொடர்பில் சூடானிய பிரதிநிதி எதனையும் குறிப்பிடவில்லை என்று ஊடகங்கள் சுட்டிக்காட்யுள்ளன.

இலங்கை மீதான தீர்மானம் நிறுத்தப்பட வேண்டிய தோல்வியுற்ற அணுகுமுறை சிரியாவின் பிரதிநிதி குறிப்பிட்டார். இதேவேளை இலங்கை விடயத்தை அரசியல்மயமாக்குவதை தவிர்க்க வேண்டும்.

அத்துடன் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு எதிராக அரசியல் நோக்கங்களுக்காக வழிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்று ஈரானிய பிரதிநிதி கேட்டுக்கொண்டார். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments