சிறப்பு அணு ஆயுத படையை களமிறக்கவிருக்கும் ரஷ்யா!

You are currently viewing சிறப்பு அணு ஆயுத படையை களமிறக்கவிருக்கும் ரஷ்யா!

ரஷ்யாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்யாவின் சிறப்பு அணுஆயுதப் படைகள் தீவிர போர் பயிற்சில் ஈடுபட்டு இருப்பதாக Interfax செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போர் நடவடிக்கைகள் 100வது நாளை தொட்டு இருக்கும் நிலையில், உக்ரைனின் கிழக்குப் பகுதி நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ரஷ்யாவின் இந்த தீவிர தாக்குதல் வேகத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவவேண்டும் என்ற உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், 700 மில்லியன் டொலர் மதிப்புள்ள ராக்கெட் ஏவுகணை மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய பாதுகாப்பு உதவி தொகுப்பை அறிவித்தார்.

இந்தநிலையில், ரஷ்யாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள இவானோவோ மாகாணத்தில் ரஷ்ய ராணுவத்தின் அணுஆயுத சிறப்பு படைப்பிரிவு தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சம் வெளியிட்ட தகவலை மேற்க்கொள் காட்டு Interfax செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போர் பயிற்சியில், 1000 வீரர்கள் வரை ஈடுபட்டு இருப்பதாகவும், இதில் 100 வாகனங்கள் முதல் ”யார்ஸ்” எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகியவை இடம்பெற்று இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments