சிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை!!

You are currently viewing சிறிலங்கா மீது சர்வதேச விசாரணை செய்யுமாறுபிரிட்டன் பிரதமரிடம் லிபரல் கட்சி கோரிக்கை!!

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழும் கடுமையான சர்வதேச குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடர ஏதுவாக ஒரு சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி கோரிக்கை விடுத்துள்ளார்.

11 ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவடைந்த ஆயுதப் போராட்டத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கான சர்வதேச பொறிமுறைகளை ஏற்க இலங்கை தொடர்ச்சியாக மறுப்புத் தெரிவித்து வருகிறது.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் ஏற்க மறுத்து அதிலிருந்து இலங்கை விலகியுள்ளதாகவும் எட் டேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டவர்களை பொறுப்புக் கூறச் செய்ய முடியும்.

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்திற்கான ஒரு படியாகவும் இந்த விசாரணை அமையும் எனவும் டேவி கூறியுள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு 

நூற்றுக்கும் மேற்பட்ட இங்கிலாந்து தமிழ் சமூகங்கள் விடுத்துள்ள அழைப்பை அடுத்து டேவி இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

டேவியின் அழைப்புக்கு சாம் டாரி மற்றும் சியோபைன் மெக்டோனாக் உள்ளி்ட்ட பல பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கையில் தமிழ் தரப்பைச் சோ்ந்த முக்கிய கட்சிகள் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்த வேண்டும் என சர்வதேச சமூகத்துக்கு பரிந்துரைத்துள்ளனர். இலங்கையின் பொறுப்புக் கூறல் பொறிமுறையை உறுதி செய்யுமாறும் அவா்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை (IIM) உருவாக்குமாறு பிரிட்டன் பிரிதமரிடம் அந்நாட்டு லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் தலைவா் எட் டேவி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள