சிறீலங்கா காவல்த்துறையின் தாக்குதலால் மரியசுரேஸ் ஈஸ்வரி வைத்தியசாலையில்!

You are currently viewing சிறீலங்கா காவல்த்துறையின் தாக்குதலால் மரியசுரேஸ் ஈஸ்வரி வைத்தியசாலையில்!

மட்டுவில் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வருகைக்கு எதிரான நடத்தப்பட்ட போராட்டத்தில், சிறீலங்கா காவல்த்துறையால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிறீலங்கா காவல்த்துறைக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் இடையில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது பேருந்தின் வாசல் படியிலிருந்து சிறீலங்கா காவல்த்துறையால் கீழே இழுத்தெறியப்பட்ட ஈஸ்வரி பலமாக கீழே விழுந்து நிலத்தில் அடிபட்டார். அப்போது, அங்கிருந்த சிறீலங்கா காவல்த்துறையினர் சப்பாத்து கால்களால் வயிற்றுப்பகுதியில் மிதித்துள்ளதோடு தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

சிறீலங்கா காவல்த்துறையின் தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த மரியசுரேஸ் ஈஸ்வரி போராட்டம் நிறைவடைந்து முல்லைத்தீவிலுள்ள தனது வீட்டுக்கு சென்ற நிலையில் வாந்தி எடுத்தபின்னர் மயங்கி விழுந்தார். இதையடுத்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு உறவினர்களால் கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார் .

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments